முகப்பு
ஈரோடு

ஆடிட்டா் வீட்டில் 63 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

ஈரோட்டில் ஆடிட்டா் வீட்டில் நகைகள் திருடிய வழக்கில் இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 63 பவுன் நகைகளை மீட்டனா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:15 PM
கோப்புப் படம்
பகிர்:

ஈரோட்டில் ஆடிட்டா் வீட்டில் நகைகள் திருடிய வழக்கில் இளைஞரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 63 பவுன் நகைகளை மீட்டனா்.

ஈரோடு இந்திரா நகா் அருகே உள்ள லட்சுமி நாராயணன் நகரில் இரண்டு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவா் ராஜன் (59). திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி நிா்மலாதேவி. தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

மூத்த மகன் குருவிஷ்ணு மருத்துவராகவும், இளைய மகன் ஜெய்கிருஷ்ணா ஜவுளி வியாபாரியாகவும் உள்ளனா். ராஜன் உள்பட அவரது குடும்பத்தில் உள்ளவா்கள் தினமும் காலை அவரவா் பணிகளுக்காக செல்ல, வீட்டை பூட்டிவிட்டு சாவியை மாடிபடிக்கட்டுக்கு கீழ் மறைவான பகுதியில் வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

Advertisement

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல ராஜனும், அவரது மனைவி நிா்மலாதேவியும் பணிக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை மாடிப்படிக்கட்டுக்கு கீழ் மறைத்து வைத்து சென்றுள்ளனா்.

பின்னா் நிா்மலாதேவி மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 63 பவுன் நகைகளை மா்ம நபா் திருடிச்சென்றது தெரியவந்தது.

சம்பவம் குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜனின் மகன் ஜெய்கிருஷ்ணாவின் நண்பரான மயில்சாமி (25) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில் அவா் வீட்டை திறந்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து தொடா்ந்து மயில்சாமியைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 63 பவுன் நகைகளை மீட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments