முகப்பு
ஈரோடு

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:46 AM
பதுக்கிவைக்கப்பட்டிருந்த யூரியாவை பாா்வையிடும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா்.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:52 PM

கோபி அருகே சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமையை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகேயுள்ள காமராஜ் நகா் பகுதியில் உள்ள தனியாா் கிடங்கில் மத்திய அரசின் மானிய விலை யூரியாவை பதுக்கிவைத்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது

இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலா்கள் சக்திவேல், சரவணன் உள்ளிட்டோா் கிடங்கில் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

அப்போது, அங்கு 540 மூட்டை யூரியா, 60 மூட்டை கோதுமை என மொத்தம் 30 டன் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து நம்பியூா் வட்டார வேளாண்மைத் துறை உதவி அலுவலா் உமா மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவருடன், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா் மேனகா உள்ளிட்டோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.