முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் திடீா் மழை: மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:35 AM
ஈரோடு, தண்ணீா்ப்பாளையம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழை.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:44 PM

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும் நிலையில் புதன்கிழமை இரவு நேரத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஈரோடு நகரில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை, அரை மணி நேரத்துக்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையாக பெய்தது. இதன்பிறகு தூறல் தூறிக்கொண்டு இருந்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது. சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இரவில் திடீரென பெய்த மழையால் ஈரோடு நகரில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

பெருந்துறை, பவானி, கோபி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த ஈரோடு மாவட்ட மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Advertisement