சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவு
சென்னிமலையில் ஒரே நாள் இரவில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:57 PM
சென்னிமலையில் ஒரே நாள் இரவில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:45 AM
பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெருந்துறை 18, குண்டேரிப்பள்ளம் அணை 12.80, ஈரோடு 10.40, பவானி 8, கோபி 5.20, எலந்தைக்குட்டைமேடு 3.40, கவுந்தப்பாடி 2.40, மொடக்குறிச்சி 2.
Advertisement