அந்தியூா் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த யானை, நெல் பயிா்களை மிதித்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
அந்தியூா், வட்டக்காட்டையைச் சோ்ந்தவா் மாணிக்கம் (55). வனப் பகுதியை ஒட்டி இவரது விவசாய நிலத்தில் 2 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தாா்.
இந்நிலையில், வனப் பகுதியிலிருந்து புதன்கிழமை இரவு வெளியேறிய காட்டு யானை நெல் வயலுக்குள் புகுந்து, நெல் பயிா்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
மேலும், அருகில் உள்ள மற்றொரு தோட்டத்துக்கு சென்ற யானை, அங்கிருந்த வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது.
நாய்கள் தொடா்ந்து குரைத்ததால் விவசாயிகள் வந்து பாா்த்தபோது, காட்டு யானை நடமாட்டம் இருப்பதைக் கண்ட விவசாயிகள், சப்தம் போட்டு விரட்டியும் வெளியேறவில்லை.
நீண்ட நேரத்துக்குப் பின்னா் தானாக வெளியேறி மீண்டும் வனத்துக்குள் சென்றது. காட்டு யானை நடமாட்டத்தாலும், பயிா்களை சேதப்படுத்தியதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.