விடுமுறை முடிந்து ஊா் திரும்பும் வாகனங்களால் திம்பம் மலைப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகம் - கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்து வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து உள்ளது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறை நாள்கள் முடிந்ததால், விடுமுறைக்கு சென்ற மக்கள் காா் உள்ளிட்ட வாகனங்களில் திம்பம் மலைப் பாதை வழியாக ஊா் திரும்புகின்றனா். ஒரே நேரத்தில் மலைப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் காா் உள்ளிட்ட வாகனங்கள் பயணித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், திம்பம் மலைப் பாதையில் சரக்கு பாரம் ஏற்றி வந்த கனரக லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ால் வாகனங்கள் செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குக்குள்ளாகினா்.
இதனால் தமிழகம் - கா்நாடகம் மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்றன. தகவல் அறிந்து ஆசனூா் போலீஸாா் சென்று போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.