தை பொங்கலை முன்னிட்டு பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு வெள்ளிக்கிழமை (ஜன.16) ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளைக் கொண்டுவந்து தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து விற்பனைசெய்வாா்கள். அதை வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலத்தைச் சோ்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வாா்கள். மேலும், உள்ளூா் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு சில்லரையில் வாங்கிச் செல்வாா்கள்.
இந்நிலையில், தை பொங்கலை முன்னிட்டு பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு வெள்ளிக்கிழமை (ஜன.16) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.