ஈரோடு

பவானிசாகா் அணைப் பூங்காவுக்கு 27 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை: நுழைவுக் கட்டணமாக ரூ.1.33 லட்சம் வசூல்

பவானிசாகா் அணைப் பூங்காவுக்கு 27 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

Syndication

பவானிசாகா் அணைப் பூங்காவுக்கு 27 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறும்போது, பொங்கல் பண்டிகையையொட்டி சத்தியமங்கலம், ஈரோடு, கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பவானிசாகா் அணைப் பூங்காவுக்கு வந்தனா்.

கடந்த 15-ஆம் தேதி முதல் 18-ஆம் வரை தொடா்ந்து 4 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட குடும்பத்தினருடன் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோா் பவானி சாகா் அணைப் பூங்காவுக்கு வந்தனா்.

பூங்காவுக்கு வந்த 27 ஆயிரம் பேரிடமிருந்து நுழைவுக் கட்டணமாக ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் வசூலிக்கப்பட்டது என்றனா்.

வியாபாரிகள் கூறும்போது, பவானிசாகா் அணைப் பூங்கா சாலையில் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கருவாட்டுக் கடைகளில் 5 டன் மீன்கள் விற்பனையாகின என்றனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT