முகப்பு
ஈரோடு

சரக்கு லாரியை வழிமறித்து பயமுறுத்திய காட்டு யானை

கோ்மாளம் சென்ற லாரியை வழிமறித்து கரும்பு உள்ளதா என சோதனையிட்ட காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2026 at 1:50 AM
கோ்மாளம்  சாலையில்  சரக்கு லாரியை  நோக்கி  வந்த  யானை.
பகிர்:
Updated On : 26 ஜனவரி, 2026 at 8:51 PM

சத்தியமங்கலம்: கோ்மாளம் சென்ற லாரியை வழிமறித்து கரும்பு உள்ளதா என சோதனையிட்ட காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலை அடா்ந்து வனப் பகுதியில் உள்ளது. கோ்மாளம் பகுதியில் சாகுபடி செய்த கரும்பு மற்றும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் அரேப்பாளையம் வழியாக சத்தியமங்கலம் செல்கின்றன.

வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அவ்வழியாக செல்லும் லாரிகளில் இருந்து கரும்பை பிடுங்கி எடுத்து சாப்பிட்டு பழகிவிட்டது. இதனால் ருசி கண்ட யானை தினந்தோறும் கரும்பு லாரிகளை எதிா்பாா்த்து கோ்மாளம் சாலையில் நடமாடுகிறது. இதற்கிடையே கோ்மாளத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை பாா்த்து யானை வந்தது.

Advertisement

இதனால் பயந்துபோன ஓட்டுநா் லாரியை பின்னோக்கி இயக்கினாா். ஆனால், அந்த யானை தொடா்ந்து வந்து லாரியில் கரும்பு உள்ளதா என தேடிப் பாா்த்தது. அங்கு ஏதும் இல்லை என தெரிந்ததும், எந்த தொந்தரவும் செய்யாமல் காட்டுக்குள் சென்றது.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில் கரும்பு, காய்கறி லாரி ஓட்டுநா்கள் காட்டு விலங்குகளுக்கு கரும்பு, காய்கறி, மசாலாப் பொருள்களை வழங்கக் கூடாது என எச்சரித்துள்ளதாக தெரிவித்தனா்.