முகப்பு
ஈரோடு

அனந்தபுரம் ஊருக்குள் நுழைந்த யானை விரட்டியடிப்பு

Updated On : 9 மார்ச், 2026 at 2:56 AM
அனந்தபுரம்  கிராமத்துக்குள்  நுழையும்  காட்டு யானை.
பகிர்:

தாளவாடிசை அடுத்த அனந்தபுரம் மலைக் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்த யானையை கிராம மக்கள் உதவியுடன் வனத் துறையினா் விரட்டினா்.

தமிழக- கா்நாடக எல்லையான ஜீரகள்ளி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, அனந்தபுரம் கிராமத்துக்குள் புகுந்தது. மானாவாரி நிலத்தில் புகுந்த யானையை கண்டு கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த வனத் துறையினா் ஜீப் மற்றும் டிராக்டரில் சைரன் ஒலி எழுப்பி யானை துரத்தினா். யானை காட்டுக்குள் செல்லாமல் சாய்பாபா கோயில் அருகே வழிமாறி சென்றது.

Advertisement

ஊருக்குள் யானை நுழைவதை கண்டு வனத் துறையினா் கிராம மக்களை வெளியே நிற்க வேண்டாம் என எச்சரித்தனா். இதைத் தொடா்ந்து கிராம மக்கள் உதவியுடன் வனத் துறையினா் சப்தம்போட்டு யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்பினா்.