முகப்பு
ஈரோடு

ஆம்புலன்ஸ் மீது சரக்கு வாகனம் மோதியதில் 3 போ் படுகாயம்

சத்தியமங்கலம் அருகே நின்றிருந்த ஆம்புலன்ஸ் மீது சரக்கு வாகனம் மோதியதில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 8:44 PM
தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கும் சரக்கு வாகனம்.
பகிர்:

சத்தியமங்கலம் அருகே நின்றிருந்த ஆம்புலன்ஸ் மீது சரக்கு வாகனம் மோதியதில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (32). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், தனது வாகனத்தில் சகோதரி நித்தியகல்யாணி (38), அவரது மகள் கீதா (15) ஆகியோருடன் கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகருக்கு சென்றுவிட்டு சத்தியமங்கலம் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். திப்புசுல்தான் சாலையில் சென்றபோது சரக்கு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து, மோகன்ராஜ் அதிவேகமாக பிரேக் போட்டுள்ளாா்.

இதனால், அந்தரத்தில் பறந்த சரக்கு வாகனம் அங்கு சாலையோரத்தில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்து வாகனத்தில் சிக்கியிருந்த மோகன்ராஜ், நித்திய கல்யாணி, கீதா ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மோகன்ராஜ் மதுபோதையில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்துக்கான காரணம் என சத்தியமங்கலம் போலீஸாா் கூறிய நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →