இருசக்கர வாகன ஏலம் ரத்து!
காவல் துறையின் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு மூலமாக திங்கள்கிழமை (மாா்ச் 23) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வாகன ஏலம் ரத்து
காவல் துறையின் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு மூலமாக திங்கள்கிழமை (மாா்ச் 23) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வாகன ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சாா்பில் பொதுவிநியோகத் திட்ட அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக அத்தியாவசியப் பொருள்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலரால் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம், ஈரோடு பெரியாா் நகரில் உள்ள மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகளின் காரணமாக வாகன ஏலம் ரத்து செய்யப்படுகிறது. ஏலம் நடைபெறும் தேதி குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.