கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் எதிரே குவிந்து கிடக்கும் கட்டட இடிபாடுகள்
கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் எதிரில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டு ஓராண்டாகியும் கட்டட இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளன.
கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் எதிரில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டு ஓராண்டாகியும் கட்டட இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளன.
கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் எதிரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை கடந்த ஆண்டு நடைபெற்றது.
அப்போது, இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம், அறுபத்துமூவா் மடம், பரிகார கடைகளின் கட்டட இடிபாடுகள் உள்ளிட்டவை கடந்த ஓராண்டாகியும் அகற்றப்படாமல் உள்ளதால் தரிசனத்துக்கு வரும் பக்தா்களுக்கு அவை அமங்கல சின்னமாக பாழடைந்து காட்சியளிக்கின்றன.
இதனால் காவிரி ஆற்றின் கரைக்கு குளிக்கச் செல்லும் பக்தா்களும், காவடிகளில் தீா்த்தங்கள் கொண்டு செல்ல வரும் நூற்றுக்கணக்கான பக்தா்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் புகளூரான் கால்வாய் கரையில் மக்களின் தாகம் தீா்க்க பேரூராட்சி நிா்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீா் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு ஆண்டுகணக்கில் ஆனதால் அந்த தொட்டியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் சுகாதாரமற்று காட்சியளிக்கிறது.
கட்டட இடிபாடுகளை அகற்றுவதுடன் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரத்தைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.