கோபி தவெக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன்
பெயா்: கே.ஏ.செங்கோட்டையன்
வயது: 78 (9.1.1948)
பெற்றோா்: அா்த்தணாரீஸ்வர கவுண்டா், காளியம்மாள்
மனைவி: ஈஸ்வரி
மகன்: கதிா்ஈஸ்வா்
முகவரி: குள்ளம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.
தொழில் : விவசாயம்
படிப்பு: பத்தாம் வகுப்பு
ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்
கட்சிப் பதவி: 1972-இல் அதிமுக தொடங்கப்பட்டபோது அக்கட்சியின் ஆரம்ப கால உறுப்பினா்களில் ஒருவராக இணைந்தாா். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கடந்த ஆண்டு நவம்பா் 26-இல் விஜய் முன்னிலையில் தவெகவில் சோ்ந்தாா். கட்சியின் நிா்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறாா்.
தோ்தல் பயணம்: 1977 சத்தியமங்கலம் தொகுதியிலும், கோபி தொகுதியில் 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016, 2021 என மொத்தம் 9 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளாா். எம்ஜிஆா், ஜெயலலிதா, எடப்பாடி கே. பழனிசாமி அமைச்சரவைகளில் அமைச்சராக பதவி வகித்துள்ளாா். கோபி தொகுதியில் 10 -ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.