நீலகிரி

குன்னூரில் 71% தேயிலை ஏலத்தில் விற்பனை

DIN

குன்னூரில் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் 71 சதவீதம் தேயிலை வியாழக்கிழமை விற்பனையாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் குன்னூரில் உள்ள ஏல மையங்களில் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை எண் 15-க்கான ஏலத்தில், 11 லட்சத்து 32 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் இடம் பெற்றது. இதில், இலை ரகம் 7 லட்சத்து 18 ஆயிரம் கிலோ, டஸ்ட் ரகம் 4 லட்சத்து 14 ஆயிரம் கிலோ விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதில், 71 சதவீதம் தேயிலை விற்பனையானது.
இதில், உயர்ந்தபட்ச விலையாக சி.டி.சி. ரகம் ரூ. 246-க்கும், ஆர்த்தோடெக்ஸ் ரகம் ரூ. 249-க்கும் விற்பனையானது. சராசரி விலையாக இலை ரகத்தில் சாதாரண வகை ரூ. 85 முதல் ரூ. 95 வரையிலும், நல்ல ரகம் ரூ. 120 முதல் ரூ. 140 வரையிலும் விற்பனையானது. டஸ்ட் ரகத்தில் சாதாரண வகை ரூ. 92 முதல் ரூ. 100 வரையிலும், நல்ல ரகம் ரூ. 125 முதல் ரூ. 170 வரையிலும் விற்பனையானது.  
மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரம் கிலோ தேயிலை ரூ. 8 கோடியே 47 லட்சத்துக்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT