நீலகிரி

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

DIN

நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் கே.செந்தில்குமரன் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
சென்னை தொழிலாளர் நல ஆணையர் பாலசந்திரன் உத்தரவின்பேரில்,  கோவை ஆணையர் மாரிமுத்து, குன்னூர் துணை ஆணையர் சக்திவேல் அறிவுரையின் பேரில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள்,  வணிக நிறுவனங்கள், உணவகங்கள்,
போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட  72 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 33 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமல்,  பணிக்கு அமர்த்தி இருப்பது, கண்டறியப்பட்டது.
இந்த நிறுவனங்கள் மீது தொழிலாளர் நிறுவனங்களின் தேசிய பண்டிகை விடுமுறைகள் சட்டம்,  உணவக நிறுவனங்கள் சட்டம்,  போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி வழக்குத் தொடரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT