நீலகிரி

குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க பா.ஜ.க. வலியுறுத்தல்

கூடலூர் நகராட்சி, ஈப்பங்காடு பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

DIN

கூடலூர் நகராட்சி, ஈப்பங்காடு பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.க. மாவட்டப் பிரசார அணிச் செயலாளர் பி.ஏ.சாமி நகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கூடலூர் நகராட்சியில் உள்ள 18-ஆவது வார்டு, ஈப்பங்காடு பகுதிக்கு குடிநீர் பெறப்படும் கிணற்றில் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால், அப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதற்கு பதிலாக மாயாற்று நீர் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. ன
இந்தத் தண்ணீரும் மிகவும் மாசடைந்துள்ளதால் குடிப்பதற்கு பயன்படுவதில்லை. இதுகுறித்து, பலமுறை புகார்  தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.  எனவே, ஈப்பங்காடு பகுதிக்கு குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT