முகப்பு
நீலகிரி

தொடர்ந்து குடியிருப்புப் பகுதியில் முகாமிட்டுள்ள மக்னா யானை

கூடலூரை அடுத்துள்ள தர்மகிரி பகுதியில் தொடர்ந்து குடியிருப்புப் பகுதியில் மக்னா யானை முகாமிட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள தர்மகிரி பகுதியில் தொடர்ந்து குடியிருப்புப் பகுதியில் மக்னா யானை முகாமிட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தர்மகிரி, சளிவயல், காமராஜ் நகர் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மக்னா யானை ஒன்று முகாமிட்டுள்ளது. 
எனவே இப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி, மனு அளித்தனர். மாவட்ட வன அலுவலர் பி.கே.திலீப், அந்த யானையை காட்டுக்குள் விரட்டுவதாக உறுதியளித்தார். 
ஆனால், வனத் துறையினர் காட்டுக்குள் விரட்டினாலும் மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கே அந்த யானை வந்துவிடுகிறது.
இதனால் வன ஊழியர்கள்  அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது காமராஜ் நகர் பகுதியில் குடியிருப்பு ஓரமுள்ள காபி தோட்டத்தில் முகாமிட்டுள்ள இந்த மக்னா யானை மீண்டும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிக்கு வர வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →