கலப்படத் தேயிலையை கட்டுப்படுத்தக் கோரிக்கை
நீலகிரியில் ஆர்.சி. எனப்படும் தேயிலைத் தூள் கழிவைப் பயன்படுத்தி, தேயிலைத் தூள் உற்பத்தி செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நீலகிரியில் ஆர்.சி. எனப்படும் தேயிலைத் தூள் கழிவைப் பயன்படுத்தி, தேயிலைத் தூள் உற்பத்தி செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நீலகிரியின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் தேயிலைத் தொழில், சமீப காலமாக விலை வீழ்ச்சியால் தள்ளாடி வருகிறது. மாவட்டத்தில் உள்ள 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலை மூலம், 160-க்கும் மேற்பட்ட சிறு தேயிலைத் தொழிற்சாலைகள், தேயிலைத் தூள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
இவற்றில் 40-க்கும் குறைவான சிறு தேயிலைத் தொழிற்சாலைகள் மட்டுமே தரமான உற்பத்தியைச் செய்துவருகின்றன. அதன்மூலம் பசுந்தேயிலைக்கும் உரிய விலை வழங்கி வருகின்றன.
"ரீ கண்டிஷன்' எனப்படும் "ஆர்.சி.' தேயிலைத் தூளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தேயிலைத் தூளின் தரம் குறைவதால், இதுபோன்று சாயம் கலந்து விற்கப்படும் கலப்படத் தேயிலையைப் பயன்டுத்துவோருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதா குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே தரமான தேயிலைத் தூளை உற்பத்தி செய்வதை தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனை தேயிலை வாரியம் உன்னிப்பாகக் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்குள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.