நீலகிரி

மழைக் காலம்: தடுப்புச் சுவர்களை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

மழைக் காலம் என்பதால் மலைக் காய்கறித் தோட்டங்களைப் பாதுகாக்கவும், மக்களின் பயன்பாட்டுக்கான வழித்தடத்தில் உள்ள தடுப்புச் சுவர்களைச் சீரமைக்கவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் நகராட்சி, நெடுஞ்சாலைத் துறைக் கட்டுப்பாட்டில் 50 க்கும் மேற்பட்ட தடுப்புச் சுவர்கள் மற்றும் மழைநீர் வடியும் கால்வாய்கள் உள்ளன.
இதில், குன்னூர் தபால் நிலையச் சாலைப் பகுதியில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய், தடுப்புச் சுவர் மிகவும் பழுதடைந்து உள்ளது.
இதனால், மழைக் காலத்தில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதேபோல, இத்தலாறு, கைகாட்டி, சாம்ராஜ், மேரிலேண்ட் பகுதிகளில் 35 க்கும் மேற்பட்ட தடுப்புச் சுவர்கள் மழையின்போது, தேயிலை, மலைக் காய்கறித் தோட்டத்தில் இருந்து அடித்து வரப்பட்ட சகதியால் அடைபட்டுக் கிடக்கின்றன. இந்த அடைப்பால் பருவமழையின்போது பெய்யும் பலத்த மழையால், சாலையில் மழைநீர் முழுவதும் வழிந்தோடுவதுடன், கீழ் பகுதியில் உள்ள மலைக் காய்கறித் தோட்டங்களும் பாதிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, பருவமழை தற்போது தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் வடியும் கால்வாய்கள், தடுப்புச் சுவர்களை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT