கூடலூரில் ராஜீவ் காந்தி நினைவு தினம்
கூடலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கூடலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில்
கூடலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கூடலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி திடலில் நடைபெற்ற 27 வது நினைவு நாள் நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரத் துணைத் தலைவர் சுல்பி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கோஷி பேபி, மாவட்ட துணைத் தலைவர் அம்சா, நகரத் தலைவர் அப்துப்பா, மாவட்டச் செயலாளர்கள் சிவா, டி.கே.நாராயணன், ஜோசப், ஷினு, உசைன், மத்தாயி, ரவுஷாத், ஜெயக்குமார், வர்கீஸ், பாவா, அபு, ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.