நீலகிரி

கூட்டுறவு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கக் கூட்டம்

DIN

நீலகிரி மாவட்ட கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் பேரவைக் கூட்டம் கூடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர் காளிமுத்து தலைமை வகித்தார். உறுப்பினர் குரூஸ் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
நியாய விலைக் கடை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வறை, கழிவறைகளை அமைத்துத் தர வேண்டும். கூடுதல் பொறுப்புகள் கொடுப்பது தவிர்க்கப் படவேண்டும். வெளிச்சந்தைப் பொருள்களை விற்குமாறு நிர்பந்திப்பதை கைவிட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உத்தரவைக் கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT