நீலகிரி

கூடலூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்; ரூ.18 ஆயிரம் அபராதம்

DIN

கூடலூர் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் சனிக்கிழமை நடைபெற்ற திடீர் சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
 மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் பார்வதி, வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோரது தலைமையில் வருவாய்த் துறையினர், நகராட்சி பணியாளர்கள் அடங்கிய இரண்டு குழுவினர்
நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனர். 
அப்போது, 19 கடைகளில் 14.150 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் ரூ. 18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT