முகப்பு
நீலகிரி

பந்தலூர் அருகே  சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கக் கோரிக்கை

பந்தலூர் அருகே சனிக்கிழமை இரவு 2 ஆடுகளை கொன்ற சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:30 am IST
பகிர்:



கூடலூர்: பந்தலூர் அருகே சனிக்கிழமை இரவு 2 ஆடுகளை கொன்ற சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  பந்தலூர் வட்டத்திலுள்ள நெல்லியாளம் பகுதியிலுள்ள நாரங்காவயல் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை அப்பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரது இரண்டு ஆடுகளை கொன்றுள்ளது. இது குறித்து வனத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.  வனச் சரக அலுவலர் மனோகரன் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். பந்தலூர் கால்நடை மருத்துவர் பாலாஜி இறந்த ஆடுகளுக்கு பிரேதப் பரிசோதனை செய்தார். ஆடுகளை கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப் பகுதியில் விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.