நீலகிரி

கரடி நடமாட்டம்: தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்

கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

DIN


கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளை ஒட்டியுள்ள வனங்களில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இதில் அண்மைக் காலமாக யானை, சிறுத்தை, காட்டெருமை ஆகிய வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டங்களுக்குள் நுழைகின்றன. பகல் நேரங்களிலேயே சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. இதேபோல, இரவு நேரத்தில் கூட்டமாக வரும் யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தற்போது தேயிலைத் தோட்டங்களில் கரடி நடமாட்டமும் காணப்படுகிறது. வாட்டர்பால் மற்றும் அய்யர்பாடி எஸ்டேட் பகுதிகளில் அதிக அளவில் கரடிகள் இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள்  கூறுகின்றனர்.  வன விலங்கு நடமாட்டம் தொடர்ந்து காணப்படுவது தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT