நீலகிரி

சட்ட விதிகளை கடைப்பிடித்து வாதிடுங்கள்!: வழக்குரைஞர்களுக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுரை

DIN

வழக்குரைஞர்கள் சட்ட விதிகளை கடைப்பிடித்து வாதிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார். 
உதகையைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் என்.கிருஷ்ணமூர்த்தியின் 50 ஆவது ஆண்டு பணி நிறைவையொட்டி  உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன்,  எம்.எம்.சுந்தரேஷ், வி.பாரதிதாசன்,  டி.கிருஷ்ணகுமார், சி.வி.கார்த்திகேயன், என்.சதீஷ்குமார் உள்ளிட்டோர்  சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். 
இதில் நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் வழக்குரைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சிறப்பாக வாதாடுகின்றனர். அவர்களது ஆங்கிலப் புலமையும், உச்சரிப்பும் சிறப்பாக உள்ளது. வழக்குரைஞர்கள் வாதாடும்போது, எந்த வழக்குக்காக வாதாடுகிறோம் என்பதை விட, அதில் நாம் சட்ட விதிகளை கடைப்பிடிக்கிறோமா என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், உதகை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், நீலகிரி மாவட்ட நீதிபதி பி.வடமலை,  தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத், திருப்பூர் மாவட்ட நீதிபதி பூர்ணிமா, நீலகிரி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் கே.ஆர்.பிரகாஷ்பாபு, ஆர்.விஸ்வநாத் மற்றும் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நீதித் துறையைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். முடிவில் வழக்குரைஞர் என்.கிருஷ்ணமூர்த்தி ஏற்புரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT