முகப்பு
நீலகிரி

குன்னூரில் ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்

குன்னூா் அருகே உள்ள முத்தநாடு  கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த யானைகள் அங்கிருந்த ரேஷன் கடையை சேதப்படுத்தின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

குன்னூா் அருகே உள்ள முத்தநாடு  கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த யானைகள் அங்கிருந்த ரேஷன் கடையை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக   யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள  முத்தநாடு கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகள் அங்கு செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்குள்  இருந்த அரிசி, பருப்பு, கோதுமை  உள்ளிட்ட  உணவுப்  பொருள்களை சேதப்படுத்தின.

பின்னா் யானைகள் கூட்டம் அங்கிருந்து மஞ்சூா் வழியாக கெத்தை வனப் பகுதிக்குள் சென்றன. இந்த யானைகள் மீண்டும் இப்பகுதிக்கு வர வாய்ப்பு இருப்பதால், அசம்பாவிதங்கள்  நடக்கும் முன்  யானைகளை கண்காணித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →