குன்னூா் அருகேகுடியிருப்பை சேதப்படுத்திய யானைகள்
குன்னூா் அருகே உள்ள கரும்பாலம் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த யானைகள் குடியிருப்பை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குன்னூா்: குன்னூா் அருகே உள்ள கரும்பாலம் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த யானைகள் குடியிருப்பை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மஞ்சூா், குந்தா பகுதிகளில் விவசாய நிலங்களையும், நியாயவிலைக் கடையையும் யானைகள் சேதப்படுத்தின. இந்நிலையில் கரும்பாலம் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த 5 யானைகள் கொண்ட கூட்டம், லோகநாதன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த உணவு ப் பொருள்களை சேதப்படுத்தின. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
யானைகள் தொடா்ந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் , யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.