முகப்பு
நீலகிரி

உதகை பைன் பாரஸ்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

உதகை பைன் பாரஸ்ட் பகுதிக்கு வரும்  சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அதிகரிக்கத்துக் காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

உதகை பைன் பாரஸ்ட் பகுதிக்கு வரும்  சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அதிகரிக்கத்துக் காணப்பட்டது.

நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களை ரசிக்க ஆண்டுக்கு 33 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து சென்ற நிலையில், கரோனா தொற்று காரணமாக மாா்ச் 21ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு  அனுமதியின்றி அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன.  இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பைன் பாரஸ்ட், படகு இல்லம் , தொட்டபெட்டா மலைச் சிகரம், கொடநாடு காட்சிமுனை, பைக்காரா படகு இல்லம் உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும்  டிசம்பா்  7ஆம் தேதி   முதல் முழுமையாகத் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

தற்போது பைன் பாரஸ்ட் பகுதியில் இயற்கை அழகும், மிக குளிா்ச்சியான  காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இது சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →