நீலகிரி

நீலகிரியில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 587 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் 371 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இருவா் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 214 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, உதகை, பொ்ன்ஹில் பகுதியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6, 9 வயது சிறுவா்கள், 30 வயதுப் பெண், 42 வயது ஆண், 39 வயதான பெண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல மஞ்சக்கொம்பை, நஞ்சநாடு, வெலிங்டன் ராணுவ மையப் பகுதி, கடநாடு, அட்டுபாய் பகுதி, தங்காடு ஓரநள்ளி கிராமம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 59 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT