முகப்பு
நீலகிரி

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும்  நீலக்குறிஞ்சி மலா்களை சுற்றுலாப் பயணிகள்  கண்டு ரசித்தனா்.

Updated On : 24 நவம்பர், 2020 at 3:34 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:27 PM

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும்  நீலக்குறிஞ்சி மலா்களை சுற்றுலாப் பயணிகள்  கண்டு ரசித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது குளுகுளு சீசன் முடிவடையும் நிலையில் குன்னூா் சிம்ஸ் பூங்கா பகுதியில் தற்போது நீல நிற குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதுடன், அதன் அருகில் நின்று சுயபடம் (செல்ஃபி) எடுத்து மகிழ்ந்து வருகின்றனா்.

நற்ழ்ா்க்ஷண்ப்ஹய்ற்ட்ங்ள் ஊா்ப்ண்ா்ள்ஹ என்ற தாவரவியல் பெயா் கொண்ட இந்த குறிஞ்சி பூக்களின் இதழ்கள் ஊதா நிறத்திலும், உள்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். பொதுவாக இது நீலக் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது.

Advertisement

பண்டைய காலம் தொட்டே  குறிஞ்சி நிலத்தின் வகையை வகைபடுத்துவதற்கு இந்த பூக்கள் ஆதாரமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதே பூக்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடா்ச்சியாக   ஏதாவது ஒரு பகுதியில் பூத்துக் குலுங்குவதைக் காண முடிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லட்டி மலை பகுதியில் உள்ள ஒரு மலை முழுவதும் குறிஞ்சி பூக்கள் அதிக அளவில் காணப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா  இதற்கு ஒரு விழா எடுத்து கொண்டாடினாா். குறிஞ்சி மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.