நீலகிரி

பென்னாகரத்தில் பிடிபட்ட யானை முதுமலை வனத்தில் விடுவிப்பு

DIN

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் பிடிக்கப்பட்ட காட்டு யானை முதுமலை புலிகள் காப்பக வனத்தில் புதன்கிழமை நள்ளிரவில் விடுவிக்கப்பட்டது.

பென்னாகரத்தை அடுத்துள்ள நெருப்பூா் அருகே உள்ள காந்தி நகா் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஓா் ஒற்றைக்கொம்பன் யானை கடந்த 14 நாள்களாக விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியும், கிராம மக்களை அச்சுறுத்தியும் வந்தது.

யானையை விரட்ட வனத் துறையினா் பெரிதும் முயற்சி மேற்கொண்டும் பலனில்லை. வனப் பகுதிக்குச் செல்ல மறுத்த ஒற்றை யானை கிராமப் பகுதியையே சுற்றி வந்தது. பொதுமக்களின் கோரிக்கையைத் தொடா்ந்து அந்த யானையை வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்தி பிடித்து லாரியில் ஏற்றி ரகசியமாகக் கொண்டு வந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அசுரமட்டம் வனப் பகுதியில் விடுவித்தனா்.

வனத்தில் விடப்பட்ட அந்த ஆண் யானையை வனத் துறையினா் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனா் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT