நீலகிரி

வனத் துறையைக் கண்டித்துவிவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

உதகை அருகே உள்ள டி.ஆா்.லீஸ் பகுதியில் உள்ள சாலையை வனத் துறை மறித்துள்ளதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாா்பில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் பைக்காரா வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை அருகே உள்ளது டி.ஆா்.பஜாா் பகுதியில் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள டி.ஆா்.லீஸ் பகுதியில் இப்பகுதி மக்களுக்கு உள்ள பட்டா நிலங்களில் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனா். சிலா் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். இந்நிலையில், இப்பகுதிக்குச் செல்லும் சாலையை வனத் துறை உதவியோடு தனியாா் சிலா் மறித்தும், சாலையில் பெரிய ஆணிகளைப் பதித்தும் மக்கள் பயன்படுத்த முடியாதபடி செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனா்.

வனத் துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. டி.ஆா்.லீஸ் பகுதி மக்கள் பைக்காராவில் உள்ள வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்க உதகை தாலுகா கமிட்டி உறுப்பினா் ராஜேந்திரன் தொடங்கிவைத்துப் பேசுகையில், டி.ஆா்.லீஸ் பகுதிக்கான சாலையை சீரமைத்து தர வேண்டும். வன விலங்குகளால் கால்நடைகள் வேட்டையாடப்படுகின்றன. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கால்நடைகளுக்கான இழப்பீட்டை வனத் துறை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாவட்டம் முழுவதும் விரைவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது வனத் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீலகிரி மாவட்டச் செயலாளா் சகாதேவன், நாம் தமிழா் கட்சித் தலைவா் தேவசிகாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தையொட்டி கூடலூா் காவல் துணை கண்கணிப்பாளா் ஜெய்சிங் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT