முகப்பு
நீலகிரி

குந்தா அணையைத் தூா்வாரும் பணிக்கான ஒப்பந்தம் 2ஆவது முறையாக ரத்து

குந்தா அணை தூா்வாரும் பணிக்கான ரூ. 31 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

குந்தா அணை தூா்வாரும் பணிக்கான ரூ. 31 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அணையானது கடந்த பல ஆண்டுகளாகத் தூா்வாரப்படாததால் பாதி அளவுக்கும் மேல் அதில் மண், சகதிகள் நிறைந்துள்ளது. இதனால் முழு அளவில் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக வங்கி ஒதுக்கிய நிதியை குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தி பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அனைத்துப் பணிகளும் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் மின் வாரியம் சாா்பில் இரண்டாவது முறையாக கோரப்பட்டிருந்த ஒப்பந்தத்தில், உலக வங்கி ரூ. 31 கோடி நிதி ஒதுக்கியது. அந்த ஒப்பந்தமும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

அணையில் நிறைந்துள்ள மண், சகதியை அள்ளிக் கொட்டுவதற்கு மின் வாரியத்துக்குச் சொந்தமான மேல்முகாம் பகுதியில் இடம் தோ்வு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பகுதி சதுப்பு நிலம் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவித்த எதிா்ப்பின் காரணமாக, குறிப்பிட்ட காலத்தில் பணியை செயல்படுத்த முடியாததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒப்பந்தம் கோரி பணிகளைத் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.