உதகை - கூடலூா் சாலை மேம்பாடு:அதிகாரிகள் ஆய்வு
உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாட்டுப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் உதகையில் நடைபெற்றன.
உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாட்டுப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் உதகையில் நடைபெற்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோட்டப் பொறியாளா் குழந்தைராஜ் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில், உதகையில் புனித ஸ்டீபன் தேவாலயம் பகுதியில் உள்ள சாலையில் அபாயகரமாக உள்ள பகுதிகளில் தடுப்பு சுவா் அமைக்கவும், மழைக் காலங்களில் வெள்ள நீா் வெளியேற மழை நீா் வடிகால்வாய்களை அமைக்கவும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினா்.
இந்த ஆய்வுகள் முடிவடைந்த பின்னா், இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பணிகள் உடனடியாகத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.