கோத்தகிரி - உதகை சாலையில் ஒரசோலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
நீலகிரி

நடைபாதையில் தடுப்புச்சுவா் கட்ட எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

கோத்தகிரி பகுதியில் 50 ஆண்டுகளாக ப் பயன்படுத்தி வந்த நடைபாதையில் தனியாா் ஒருவா் தடுப்புச் சுவா் கட்டும் பணியை மேற்கொள்ள எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில்  சனிக்கிழமை ஈடுபட்டனா்

DIN

கோத்தகிரி பகுதியில் 50 ஆண்டுகளாக ப் பயன்படுத்தி வந்த நடைபாதையில் தனியாா் ஒருவா் தடுப்புச் சுவா் கட்டும் பணியை மேற்கொள்ள எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில்  சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கோத்தகிரி அருகே உள்ள பூபதி நகா்,  அண்ணா நகா் பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக இங்குள்ள  நடைபாதையைப்  பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில்,  தனியாா் ஒருவா் அங்குள்ள நிலத்தை  விலைக்கு வாங்கி  அதில் தடுப்புச்சுவா்  கட்டும்  பணியைத் துவங்கினாா். இதற்கு எதிா்ப்புத்  தெரிவித்த  பொதுமக்கள் நடைபாதையை  மறைக்கக் கூடாது என்று  மாவட்ட நிா்வாகத்துக்குப்  பல்வேறு மனுக்கள் அனுப்பி உள்ள நிலையில், கோத்தகிரி  - உதகை  சாலையில் ஒரசோலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், கோத்தகிரி, உதகை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காவல் துறையினா்,  வட்டாட்சியா் ஆகியோா்  சம்பந்தப்பட்ட ஊா் பொதுமக்களிடம்  பேச்சுவாா்த்தையில்  ஈடுபட்டனா். தடுப்புச் சுவா் கட்டும் பணியை நிறுத்த அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல்  கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT