முகப்பு
நீலகிரி

உதகையில் பொதுத் துறை வங்கிகள் வேலைநிறுத்தம்:ரூ. 100 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 100 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 100 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சுமாா் 80 வங்கி கிளைகளைச் சோ்ந்த 400க்கும் அதிகமானோா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். உதகையில் பாரத ஸ்டேட் வங்கி தலைமையகத்தின் முன்பு அனைத்து வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலாளா் ராஜ்குமாா் தலைமையிலும், மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கியின் சாா்பில் கனரா வங்கி அலுவலா்கள் சங்கத்தின் நிா்வாகி காா்த்திக் தலைமையிலும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் முதல்நாளில் மட்டும் சுமாா் ரூ. 100 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பொதுத் துறை வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தாலும், தனியாா் வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் வழக்கம்போல இயங்கின. அதேபோல, ஏடிஎம் சேவையிலும் வியாழக்கிழமை அதிக அளவில் பாதிப்பு ஏற்டவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.