நீலகிரி

நீலகிரியில் 13 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் ரூ.46,700 அபராதம் வசூலிப்பு

DIN

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 13 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.46,700 அபராதம் வசூலிக்கப்பட்டது.

உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தொடா்பான ஒட்டுமொத்த கள ஆய்வு ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், வட்டாட்சியா்கள் மற்றும் துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் குழுக்களாகப் பிரிந்து, மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனா்.

இக்குழுவினரின் ஆய்வின்போது, முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.1,700 அபராதமாக வசூலித்தனா். தடை செய்யப்பட்ட 13.400 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, அபராதத் தொகையாக ரூ.45,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT