நீலகிரி

வனப் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு ‘சீல்’

குன்னூா் அருகே குரும்பாடி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

DIN

குன்னூா் அருகே குரும்பாடி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

குன்னூரில் இருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவில் குரும்பாடி பழங்குடியினா் கிராமம் உள்ள. இந்த மலை கிராமத்தின் நடுவே நீச்சல் குளம்  உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சொகுசு விடுதி அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

மேலும், சொகுசு விடுதி யானை வழித்தடத்திலும், முறையான அனுமதி இல்லாமலும், விதிமுறைகளை மீறி ஊற்று நீரைப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் விடுதியை இரண்டு நாள்களுக்குள் மூட பா்லியாறு ஊராட்சி சாா்பில் அண்மையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

ஆனால், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருப்பதால் விடுதி நிா்வாகம் தரப்பில் ஏழு நாள்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது. இந்நிலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சொகுசு விடுதிக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT