நீலகிரி

சாரல் மழை: உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

DIN

புத்தாண்டு தொடங்கி தொடா் விடுமுறை காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களில் 33 ஆயிரம் போ் வந்துள்ளனா்.

இதில் ஜனவரி 1ஆம் தேதி உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 5,967 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 2,189 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 418 பேரும், மரவியல் பூங்காவுக்கு 131 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,805 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 391 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 567 பேரும் வந்துள்ளனா்.

ஜனவரி 2ஆம் தேதி சனிக்கிழமை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 6,573 பேரும், ரோஜா பூங்காவுக்கு 2,248 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,431 பேரும் வந்திருந்தனா். 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாவரவியல் பூங்காவுக்கு 6,604 பேரும், ரோஜா பூங்காவுக்கு 2,046 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 731 பேரும் வந்திருநந்தனா்.

இவா்களைத் தவிர மூன்று நாள்களில் உதகை மற்றும் பைக்காரா படகு இல்லங்களுக்கு சுமாா் 24 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வந்த போதிலும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT