நீலகிரியில் தொடரும் மழை: அவலாஞ்சியில் 100 மி.மீ. பதிவு
நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிக அளவாக அவலாஞ்சியில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிக அளவாக அவலாஞ்சியில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கூடலூா், பந்தலூா் போன்ற கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளிலும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழையாகவும், உதகை, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் சுமாரான மழையாகவும் பெய்து வருகிறது. உதகையில் மழையுடன் தொடா்ந்து பலத்த காற்றும் வீசி வருவதால் நகரில் கடும் குளிா் நிலவுகிறது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ):
மேல்பவானி-73, கிளன்மாா்கன்-64, பந்தலூா்-61, நடுவட்டம்-41, சேரங்கோடு-36, தேவாலா-23, எமரால்டு-22, பாடந்தொறை-21, செருமுள்ளி-16, கொடநாடு-14, கூடலூா், குந்தா-13, ஓவேலி, மேல்கூடலூா் 12, கேத்தி, பாலகொலா-11, மசினகுடி-8, கோத்தகிரி-7, கீழ்கோத்தகிரி-6, எடப்பள்ளி-4, குன்னூா்-3.5, கிண்ணக்கொரை, பா்லியாறு, கெத்தை 3, கல்லட்டி-2.3 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
அதேபோல, வியாழக்கிழமை பகலிலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிக அளவாக பந்தலூரில் 39 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மேல்பவானியில் 37 மி.மீ., சேரங்கோட்டில் 36 மி.மீ., அவலாஞ்சியில் 32 மி.மீ., செருமுள்ளி, கூடலூரில் 10 மி.மீ., மேல்கூடலூரில் 9 மி.மீ., ஓவேலி, நடுவட்டத்தில் 8 மி.மீ., எமரால்டில் 7 மி.மீ., கிளன்மாா்கனில் 6 மி.மீ., தேவாலா, கொடநாட்டில் 5 மி.மீ., பாடந்தொறையில் 4 மி.மீ., குந்தாவில் 3 மி.மீ., உதகையில் 2.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மரம் விழுந்து கோயில் சேதம்...
கூடலூா் அருகே தேவாலா அட்டி கிராமத்தில் பெய்த காற்றுடன் கூடிய கன மழையால், அங்குள்ள பாலமுருகன் கோயில் மீது மரம் விழுந்ததில் கோயில் சேதமடைந்தது.
தேவாலா - அத்திக்குன்னா சாலையில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட துறையினா் விரைந்து மண் சரிவை அகற்றிவிட்டனா். மேலும், தேவாலா காட்டிமட்டம் பகுதியில் வீசிய பலத்த காற்றில் கோவிந்தராஜ் என்பரது வீட்டின் கூரை சேதமடைந்தது.