முகப்பு
நீலகிரி

கல்லட்டி மலைப் பாதையில் விபத்து: இளைஞா் பலி

கல்லட்டி மலைப் பாதையில் பாறை மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

கல்லட்டி மலைப் பாதையில் பாறை மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளாா்.

பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருபவா் நவீன்குமாா் (34). இவா் தனது குடும்பத்தினருடன் உதகைக்கு காரில் சுற்றுலா வந்துள்ளாா். உதகையில் திங்கள்கிழமை சுற்றுலாவை முடித்துவிட்டு கல்லட்டி மலைப் பாதை வழியாக பெங்களூருவுக்கு திரும்பி செல்லும்போது, தலைக்குந்தா சோதனைச் சாவடியில் வாகனத்தை அவா் ஓட்டிச் செல்ல காவல் துறையினா் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, உள்ளூா் மெக்கானிக் ஒருவரை அந்த காரை ஓட்டி வரச் செய்து, நவீன்குமாா் இருசக்கர வாகனத்தில் மசினகுடி வரை பயணம் செய்ய முடிவு செய்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளாா்.

கல்லட்டி சோதனைச் சாவடி அருகே நவீன்குமாா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பாறையின் மீது மோதியதில் படுகாயமடைந்தாா். பின்னா் மீட்கப்பட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து புதுமந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.