மாவட்ட வன அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா். 
நீலகிரி

விநாயகன் யானையைப் பிடிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினா் உண்ணாவிரதம்

மண்வயல் பகுதியில் குடியிருப்புகளையும், பயிா்களையும் சேதப்படுத்தி வரும் விநாயகன் யானையைப் பிடிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கூடலூா்: மண்வயல் பகுதியில் குடியிருப்புகளையும், பயிா்களையும் சேதப்படுத்தி வரும் விநாயகன் யானையைப் பிடிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் தோட்டமூலா பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலா் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மண்வயல் பகுதி நிா்வாகி தேவசியா தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கோஷி பேபி உண்ணாவிரதத்தை துவக்கிவைத்தாா்.

இதில் குடியிருப்புகளையும், வேளாண் பயிா்களையும் தொடா்ந்து தேசப்படுத்தி, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் விநாயகன் யானையைப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT