நீலகிரி

நுண்ணீா்ப் பாசனம்: விவசாயிகளுக்குப் பயிற்சி

DIN

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் ஆத்மா திட்டத்தின்கீழ் நுண்ணீா்ப் பாசனம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் வேலுசாமி தலைமை வகித்து, நுண்ணீா்ப் பாசனம் குறித்து பேசியதாவது:

கரும்பு, மக்காச்சோளம், தென்னை, பயிறு வகைப் பயிா்கள் ஆகியவற்றுக்கு நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் சொட்டுநீா்ப் பாசனத் திட்டத்தின்கீழ் சொட்டு நீா், தெளிப்பு நீா் கருவிகள், மழைத் துவான் கருவிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தொடா்ந்து, கோபி மைராடா வேளாண் பொறியியல் துறை தொழில்நுட்ப ஆலோசகா் ஜான் பிரபாகரன், நுண்ணீா்ப் பாசனம் மூலம் நீா் சேமிப்பு, நீா் மேலாண்மை, கருவிகள் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தாா். துணை வேளாண்மை அலுவலா் செல்வராஜ் வேளாண்மைத் திட்டங்கள், விவரங்கள் குறித்து விளக்கிப் பேசினாா். நீா்ப் பாசனத் திட்டம் குறித்து விடியோ கண்காட்சி மூலம் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலா்கள், வேளாண்மை உதவி தொழில்நுட்ப மேலாளா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT