நீலகிரி

கூடலூா் நகரில் வளா்ச்சிப் பணிகள்:ஆட்சியரை சந்தித்து முறையிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள்

DIN

கூடலூா் நகரின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி நகா் மன்ற உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியரை புதன்கிழமை சந்தித்து முறையிட்டனா்.

கூடலூா் நகராட்சி நகா் மன்ற உறுப்பினா்கள் வெண்ணிலா சேகா், வா்கீஸ், சத்தியசீலன், ஆபிதா பேகம், தனலட்சுமி, ஏ.உஸ்மான் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித்தை புதன்கிழமை நேரில் சந்தித்து கூடலூா் நகரின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி முறையிட்டனா்.

அதில், கூடலூரில் கடந்த தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த தொடா் கனமழையால் நூலகக் கட்டடம் இடிந்து யாரும் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் பயன்பாட்டுக்காகவும் போட்டித் தோ்வு எழுதும் இளைஞா்களின் நலனுக்காகவும் அந்த இடத்தில் வாகன நிறுத்தத்துடன் கூடிய நவீன நூலக கட்டடம் கட்டித் தரவேண்டும்.

நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இளைஞா்களின் நலனுக்காக அரசு கால்நடை மருத்துவமனை அருகிலுள்ள வெற்றிடத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தை சீரமைத்து மாணவா்களின் பயன்பாட்டுக்கு விடவேண்டும்.

கூடலூா் நகராட்சியில் மேலாளா், வருவாய் ஆய்வாளா் மற்றும் சுகாதார ஆய்வாளா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா். அனைத்து காலிப் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT