நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள வனப்பகுதியின் வனவளம் தமிழக அரசின் வனத்துறையால் மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உதகையில் ரூ. 38 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேசியதாவது:
சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற அமைப்பதற்க்கு சென்னை நகரின் மையப்பகுதியில் கூடுதல் நிலம் தேவைப்பட்டது. அப்போது ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மூன்று ஏக்கர் நலத்துடன் கூடுதலாக பல கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்கிய தமிழக முதல்வருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீதித் துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து தருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
காலம் தாழ்த்தி வழங்கப்படும் தீர்ப்புகளால் யாருக்கும் பயன் அளிப்பதில்லை. எனவே வழக்குகளை நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்காமல் ஐந்தாண்டுகளில் தீர்ப்பு கிடைக்கும் வகையில் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி உதகையில் நடைபெற்ற புதிய நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார். என்.சேஷசாயி. பவானி சுப்பராயன், ஆனந்தி ஆகியோருடன் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.