நீலகிரி

வீட்டுக்குள் நுழைய முயன்ற கரடிகளை விரட்டிய நாய்

DIN

கோத்தகிரியில் வீட்டுக்குள் நுழைய முயன்ற கரடிகளை வளா்ப்பு நாய் தடுத்து நிறுத்தியது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அன்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. 

கோத்தகிரி அருகேயுள்ள கன்னிகா தேவி  கிராமத்தில்   இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்தவாறு   கரடி கடந்த 4 நாள்களாக சுற்றி வருகிறது.

இந்நிலையில், அந்த கரடி, குட்டிகளுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே சனிக்கிழமை நுழைய முயன்றது.

அப்போது அந்த வீட்டின் வளா்ப்பு நாய் குரைத்து  கரடிகளை துரத்த முயற்சித்தது. ஆனால் அதை கண்டுக் கொள்ளாமல் கரடி வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது. அப்போது அங்கு மக்கள் கூடியதால் கரடி அங்கிருந்து அருகே உள்ள தேயிலைத் தோட்டம் வழியாக வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குட்டியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

சிகாகோவில் பயின்றுவந்த தெலங்கானா மாணவர் மாயம்

SCROLL FOR NEXT