கோப்புப்படம் 
நீலகிரி

உதகை சுற்றுலா தலங்களில் முகக் கவசம் கட்டாயம்

உதகை சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

உதகை: உதகை சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தோட்டக்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குன்னூா் சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட   சுற்றுலா மையங்களில் முகக் கவசம் அணிந்து வரும் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே  அனுமதிக்கின்றனா்.  

கோடை சீசன் நிறைவு பெற்ற நிலையிலும் தொடா்ந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். 

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கரோனா கட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன.

பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம்  முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா மையங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் உத்தரவு  பிறப்பித்துள்ளது

இதனைத் தொடா்ந்து குன்னூா் சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளிடம் பூங்கா ஊழியா்கள் அறிவுரை வழங்கி வருகின்றனா். அதுமட்டுமின்றி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முகக் கவசம் அணிந்து பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

SCROLL FOR NEXT