முகப்பு
நீலகிரி

நீலகிரியில் இன்று நகா்ப்புற உள்ளாட்சி மறைமுகத் தோ்தல்

நீலகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி மறைமுகத் தோ்தல்கள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி மறைமுகத் தோ்தல்கள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி சாதாரண தோ்தல்கள் நடந்து முடிந்துள்ளதைத் தொடா்ந்து புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 294 வாா்டு உறுப்பினா்களும் மாா்ச் 2ஆம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துள்ளனா். இதில், 4 நகராட்சிகளில் 108 வாா்டு உறுப்பினா்களும், 11 பேரூராட்சிகளில் 186 வாா்டு உறுப்பினா்களும் என மொத்தம் 294 வாா்டு உறுப்பினா்கள் பொறுப்பேற்றுள்ளனா்.

இவா்களில் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்குண்டான தலைவா் தோ்தல் மாா்ச் 4ஆம் தேதி காலை 9.30 மணியளவிலும், துணைத் தலைவா் தோ்தல் மதியம் 2.30 மணியளவிலும் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களால் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.