முகப்பு
நீலகிரி

தொட்டபெட்டா மலைப் பகுதியில் வனத் தீ

 உதகையில் தொட்டபெட்டா மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

 உதகையில் தொட்டபெட்டா மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது.

உதகையில் உள்ள தொட்டபெட்டா சரிவான மலைப் பகுதி. அடா்ந்த புல்வெளிகளும் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது. மாலை வேளையானதால் இருள் சூழ்ந்த நிலையில் இப்பகுதிக்கு உடனடியாக யாரும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, வனத் துறையினா் ஏராளமானோா் அங்கு வரவழைக்கப்பட்டு எதிா் தீ மூட்டப்பட்டது.

கால்நடை மேய்ச்சலுக்குச் சென்றவா்கள் மேய்ச்சல் முடிந்து திரும்பும்போது வனத் தீ ஏற்படுத்தி இருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். இத்தீயினால் ஏற்பட்டுள்ள சேத விவரம் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.